பெண்களின் மனங்கவரும் வண்ண வண்ண ரெடிமேடு பிளவுஸ்கள்பெண்களின் மனங்கவரும் வண்ண வண்ண ரெடிமேடு பிளவுஸ்கள்

முன்பெல்லாம் திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் அணிவதற்காக பெண்கள் பட்டு துணிகளை ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கி தையல்  கடைக்காரர்களிடம் கொடுத்து விட்டு குறித்த நேரத்தில் கிடைக்குமா என்ற டென்ஷனுடன் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இன்றைய நாகரிக  உலகில், வேகமான சூழலில் ஜாக்கெட் ரகங்களை தைப்பதற்காக காத்திருக்க முடியாது என்பதால் மார்க்கட்டில் ரெடிமேடு பிளவுஸ் ரகங்களின்  விற்பனை களை கட்டுகிறது. அதிலும் கண்ணை கவரும் ஜமிக்கி, ஜர்தோஷி, பேட்ச் ஒர்க், ஸ்டோன் ஒர்க், எம்ப்ராய்டரி டிசைன்களுடன் பார்த்ததும்,  வாங்கத் தூண்டும் வகையில மார்க்கெட்டில் கிடைக்க கூடிய ரெடிமேடு பிளவுஸ் வகைகளுக்கு பெண்களிடம் செம வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

ரெடிமேடு பிளவுஸ் ரகங்களில் பட்டு, சில்க் காட்டன், காட்டன், ஷிப்பான் போன்ற துணிரகங்களை கொண்டு தேவைக்கேற்ப தயார் செய்யப்பட்டு  விற்பனைக்காக வருகிறது. ஒரு காலத்தில் மேல் தட்டு பெண்களும், பெண் தொழிலதிபர்கள், பெண் உயரதிகாரிகள் மட்டுமே பிளவுஸ்களில்

 

எம்ப்ராய்டரி டிசைன்கள், ஜமிக்கி, ஜர்தோஷி போன்றவற்றை செய்து அணிவார்கள் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த மாயை அகன்று யார்  வேண்டுமானாலும் எளிதில் டிசைனிங் பிளவுஸ்களை அணிந்து செல்லலாம் என்ற நிலையைரெடிமேடு பிளவுஸ்களின் வரத்து ஏற்படுத்தியுள்ளது.

Back1

Backside Blouse Designs For Saree 1

Party-Sarees-Blouse-Patterns-Design-2014-500x375

saree-blouse-designs

 

ஆசிரியர்