அடர்த்தியான வலுவான பளபளப்பான கூந்தலை பெறுவது பலருக்கும் கனவாகவே இருக்கலாம். ஆனால் இது உண்மையில் கனவில்லை. நீங்கள் மெனக்கெட்டால் எளிதாக இதை பெற முடியும்.
தயிர் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடியது. பொடுகு பிரச்சனையை போக்க கூடியது என்று தயிரை பயன்படுத்துவதுண்டு. ஆனால் இது அதை தாண்டி கூந்தலுக்கு பல நன்மைகளை செய்ய கூடியது.
தயிர் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் கொண்டவை. இது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது. தயிர் கூந்தலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கூந்தலுக்கு தயிர் தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். இது உடலை போன்று கூந்தலுக்கும் பல விதமான நன்மைகளை தரக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் தேவை. இது நிறைவாக இருக்கும் வரை உடலும் ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதெல்லாம் அது மோசமான முடி உதிர்தலை உண்டாக்கிவிட செய்யலாம்.
இந்த முடி உதிர்தலை எதிர்கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒரு கப் தயிர் உதவுகிறது. இதை தவிர்க்காமல் எடுத்துகொண்டால் இது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
நிறைவான புரதம்
புரதம் உடலில் நிறைவாக இருக்கும் போது அது உச்சந்தலையில் மயிர்க்கால்களை வலுவாக வைத்திருக்க செய்யும். உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நீங்கள் தயிரை உள்ளுக்கு எடுக்கும் போதும், அதை கூந்தலில் தடவி பயன்படுத்துவதன் மூலம் இந்த சத்தை பெற்றுவிட முடியும்.
புரதம் உடலில் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்க செய்யும். இவை குறையும் போது அது முடி வளர்ச்சியையும் பாதிக்க செய்யும். ஆனால் இதை ஒரு கப் தயிர் தடுத்துவிடுகிறது.
உச்சந்தலைக்கு ஈரப்பதம்
கூந்தலின் உச்சந்தலையில் வறட்சி உண்டாகும் போது மயிர்க்கால்கள் வறண்டு சோர்வடைய செய்கிறது. இது முடி வளர்ச்சியை பாதிக்க செய்வதால் முடி உதிர்வு, முடி பிளவு பிரச்சனையும் அதிகரிக்க செய்கிறது.
ஒருகப் கெட்டித்தயிரை உச்சந்தலை ஸ்கால்ப் பகுதியில் தடவும் போது அது உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. இது மயிர்க்கால்களுக்கு புத்துயிர் அளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்கிறது.
பறந்து விரிந்த முடி
முடி மென்மையாக இருந்தால் அது பறந்து விரியாது. ஆனால் முடி பறக்கும் தன்மை கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. இதை அடக்கி ஆள தயிர் உதவக்கூடும். தயிர் மென்மையானது. இது வறண்ட முடியையும் மென்மையாக்க கூடியது. முடியை பறக்காமல் வைக்க தயிர் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்வீர்கள்.
பொடுகு வெளியேற்றுகிறது
உச்சந்தலையில் பொடுகு என்பது தலையில் வெள்ளை செதில்களை உண்டாக்க கூடியது. இது பார்க்கவே அருவெருப்பாக இருக்கும். இந்த பொடுகை வெளியேற்ற உதவும் இயற்கை பொருளில் தயிர் முக்கியமானது.
ஒரு கப் கெட்டித்தயிரை தலையில் தடவி 40 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு அலசி எடுக்கவும். பொடுகு நீங்கும் வரை இதை செய்யலாம்.
பிரகாசம் அளிக்கிறது
தலைமுடிக்கு பிரகாசம் அளிக்க பல வெளி தயாரிப்புகளை பயன்படுத்துகிறோம். ஆனால் பிரகாசமான கூந்தலுக்கு தயிர் உதவுகிறது. தயிர் அற்புதமான மந்திரங்களை கூந்தலுக்கு செய்யும். கூந்தல் நுனியும் உச்சந்தலையும் தயிர் கொண்டு பேக் செய்தால் அது பிரகாசமான கூந்தலை கொடுக்கும்.
கூந்தலை வலிமையாக்குகிறது
கூந்தல் வலிமையாக இருந்தால் அது முடி உதிர்வை ஊக்குவிக்காது. ஆனால் பலமிழந்த கூந்தலுக்கு வலு கொடுக்க ஹேர் பேக் அவ்வபோது போடுவது நல்லது. தயிருடன் ஆலிவ் எண்ணெய், துளசி இலை சேர்த்து மசித்து உச்சந்தலையில் தடவி பேக் போடவும்.
20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இது கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்க கூடியது. கூந்தலை வலிமையாக்க இந்த தயிர் பேக் போடுங்கள்.
ஹேர் கண்டிஷனர்
முடிக்கு தயிர் சிறந்த இயற்கை கண்டிஷனர் என்று சொல்லலாம். உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்க கூடும். தயிருக்கு இயற்கை கண்டிஷனராக தயிருடன் தேன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் இவை இன்னும் சிறப்பாக பயன்படக்கூடும்.
நன்றி : தமிழ் சமயம்