செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெண்களும் மனப்பதற்றமும்

பெண்களும் மனப்பதற்றமும்

1 minutes read

இயற்கையாகவே ஆண்களுடன் ஒப்பிடும்போது மனப்பதற்ற பிரச்சினை பெண்களுக்கு அதிகமாகவே உண்டு. ஆண்கள் வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகங்களிலும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அதிகப்படியான மனிதர்களை சந்திக்க நேர்வதால் அனைத்தையும் மறந்து, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள பழகிவிடுகின்றனர்.

பெண்கள் அலுவலகத்துக்குச் சென்றாலும் அதிக நேரத்தை நண்பர்களுடன் செலவழிக்க முடியாமல், வீட்டுப் பொறுப்பையும் கவனிக்க வேண்டி இருப்பதால் ஒருவித பதற்றத்திலேயே இருக்கின்றனர். இந்த மனப்பதற்றம் பொதுவாக திருமணமானதில் இருந்து மெனோபாஸ் காலத்திலேயே அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பதற்றமானது இளம் பெண்களையும் விட்டு வைப்பதில்லை. நண்பர்களின் பேச்சு மற்றும் அலுவலகப் பிரச்சினை காரணமாக அவர்களுக்கும் மனப் பதற்றம் ஏற்படுகிறது.

தீர்வு

மனப்பதற்றத்தின் ஆரம்ப நிலையிலேயே அதை உணர்ந்து அதற்கேற்றவாறு யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இனிமையான பாடல்கள் கேட்பது, பிடித்த செயல்களை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

நேர்மறை எண்ணங்களையும் நினைக்க முற்படுவது, பிடித்த விடயங்களை செய்வது, தனிமையில் இல்லாமல் நண்பர்களுடன் அதிக நேரங்களை செலவிடுவது என ஈடுபடலாம்.

மேலும், பிரச்சினை அதிகமாகி, அவை தினசரி வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தும்போது மருத்துவ ஆலோசனையை பெறலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More