1
மனமெல்லாம் பரவசம்
கண்ணெல்லாம் ஆனந்தம்
கனவுகள் தோன்றுது
தாலாட்டு பாடுது
காரணம் தான் என்னவோ
சின்ன கண்ணன் வருகையோ!
.
வயிற்றினில் உன் உதைப்பு
கதைகள் பல சொல்லுது
நெஞ்சினில் உன் நினைப்பு
கற்பனையாய் மிதக்குது
இனம் புரியா மகிழ்வொன்று
நெஞ்சுக்குள் அடைக்குது
எம் வாழ்வின் அர்த்தத்தை
வானளவு உயர்த்துது
தாயெனும் ஓர் பதவி
உன் வரவால் கிடைக்குது
இத் தாயின் நெஞ்சுக்குள்
உன் வரவு இனிக்குது
நன்றி சொல்லி பாடவா
உனை தாலாட்டி பாடவா……
.
– சுகி கணேசலிங்கம்