அன்று…
கலைந்த கேசமும்
வசீகர நெற்றியும்
வில்லாக புருவமும்
குறுகுறு பார்வையும்
கூர்மையான நாசியும்
எச்சில் குவியும்
பொக்கவாய் சிரிப்பும்
பிஞ்சு விரல்களும்
பவழ மேனியுமாக
திகழ்பவன் என் பேரன்.
அவன் அடித்து நொறுக்கிய
பொம்மைகள் ஆயிரம்
அசையா பொருளும் அசைந்து விடும்
அவனிடம்.
சொல்வதை கேட்டு
செய்வது ஓர் அறிவு
செய்வதை பார்த்து
சொல்வது ஓர் அறிவு
சிறு வயதில்…
இந்த அறிவு அவனுக்கு
உண்மையில் பேரரறிவு
இன்று…
அசையும் பொருளும்
அசையா பொருளும்
அசையாமல் கிடக்கிறது
அவனில்லாமல்…
என்வீடு கலையிழந்து
வெறிச்சோடிப்போனது அவன்
வருகையில்லாமல்…
கவிதை: உஷா விஜயராகவன்
கலை: தன்யஸ்ரீ
நன்றி : கவிக்குயில்