0
அன்றொரு நாள் அதே நேரம் அதே நிலவு
அதிகாலை மதியம் மாலை நள்ளிரவு
ஆதவனும் சந்திரனும் அதிர்ந்து நின்ற நாட்கள்
பதுங்கு குழியே தொட்டிலாகிய காலம்
தாயின் மடியிறங்கி தவழ்ந்த மழலையை
விண்ணென்று வந்த வான் விலங்கு கண்டு
குழிக்குள் இட்டு சிறகுகளால் காத்தன
குஞ்சின் கோழியும் சேவலும்.
வினாடி முடியவில்லை அனாதையாய் கிடந்தது
அந்த
தமிழனாய் பிறந்த
ஒரு வயது குழந்தை