கவிதை | பத்துத் திங்களில்…| சுஜீவன்கவிதை | பத்துத் திங்களில்…| சுஜீவன்

உந்திப் பையினுள் ஓர்
இடம் கண்டு
சுக்கிலச் சிதறலால் சிறு
கருக்கொண்டு

உதிரப் புனலால் முழு
உருக்கொண்டு
மூடிய அறைக்குள் புற
வழிகண்டு

பத்துத் திங்களில் மெல்ல
விழி திறந்து
ஓரிடம் பார்த்து பல
கதைகண்டு

தன்னினம் பார்த்து புது
உருகண்டு
வாழும் பின் மாழும் ஒரு
சதை பிண்டம்

Sujivan –

ஆசிரியர்