கவிதை | நேற்றைய பொழுதுகள் கனவுகளுடன் கவிதை | நேற்றைய பொழுதுகள் கனவுகளுடன்

நேற்றைய பொழுதுகள் கனவுகளுடன்
காலம் குறிப்பெடுத்து கவிதை எழுதியது …
நீயும் நானும் நடந்தோடிய வயல் வெளிகளில்
பருவகாற்று பசியாற்றி ….
ஒரு வேளை உணவை உனக்காக தந்தது
பள்ளி செல்லும் காலமும்
மாலை வயல் வேலையும்
வாழ்வின் ரகசியத்தை மனசுக்குள் ………..
ஆம்
மனசுக்குள் நினைத்து நினைத்து
உருகுகின்றேன்…
நாளை வரும் என் நிலம்
எல்லாம் இழந்த
பட்டமரமாய் வெட்டவெளியில்
நிர்வாணமாய் இருக்குமா ?
இல்லை
ஊரின் எல்லையில் உள்ள
சுடு காடு – எம்
வாழ்விடமாய் இருக்குமா ?
அப்போதும்
எம் நிலம் எமக்காக
வேண்டி ஒரு
கனவு காண்போம் ….

ஆசிரியர்