கவிதை | அன்பான அப்பா கவிதை | அன்பான அப்பா

 

எத்தனை ஆண்டுகள்

எனக்கான உன் பயணம்

நாளை நான் பிரியலாம் – எனக்கும்

ஒரு குடும்பம் வரலாம்

ஆனாலும் – நான்

உன் மகள் அப்பா.

எனக்காக நீ விடும்

மூச்சுக்காற்று

என் ஆன்மாவை

தீண்டுகிறது  – நான்

என்றும் உன்னுடன் வாழும்

வரம் வேண்டுகிறேன்…..

தருவாயா ?

தந்தையர் தினத்திலும்

நானே கேட்கின்றேன்

ஏனென்றல் எப்போதும்

நீதானே – எனக்கு

எல்லாமே தருவது ….

இன்று – என்

மனம் நிறைந்த

வாழ்த்துக்கள் மட்டுமே

ஆசிரியர்