March 24, 2023 3:06 pm

நேர்காணல் | இயக்குனர் தங்கர்பச்சானுடன் ஆவூரான்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தலை சிறந்த இலக்கியங்களைத் திரையில் தந்த இலக்கிய வாதியும் ஒளிப்பதிவாளரும் சிறந்த நடிகருமான  தங்கர்பச்சான் அவர்கள் வழங்கிய நேர்காணல்.

வணக்கம் தங்கர்பச்சான் அவர்களே! உங்களின் இலக்கியப் பிரவேசம் பற்றிச் சுருக்கமாக ஆரம்பியுங்கள்.

எனது கிராமம் சிறிய சனத்தொகையைக் கொண்ட கிராமம். இலக்கியமோ கதைகளோ இருப்பது அந்தக் கிராமத்துக்கு மட்டும் இல்லை எனக்கும் தெரியாது. இந்தக் காலகட்டத்தில் சென்னைக்கு நான் வந்தபோது பார்த்த சென்னை எனக்கு மருட்சியாக இருந்தது. (1967 கல்லூரி படிப்பு ஆரம்பமாகிறது) கல்லூரிப் படிப்புப் படித்து திரைப்படத்துறையில் நுழையும் போது தான் எனக்கு இலக்கியம்இ திரைத்துறை பின்பு அரசியல் இலக்கியம் என ஒட்டு மொத்த வாழ்வு தேவைகள் கடமைகள் உரிமைகள் எல்லாவற்றையும் இலக்கியம் பேசுது என தெரியவந்ததுஇ அதனைக் காட்டி நின்றது திரைப்படத்துறைதான்.

ஒரு நாள் சென்னையில் இருந்து வரும்போது பஸ் தரிப்பு நிலையத்தில் ஒரு நடைபாதை புத்தக வியாபாரியிடம் இருந்து ஒரு புத்தகத்தைப் பெற்றேன். அது இ. ராமசாமியின் “பிஞ்சுகள்” அதை வாசித்து முடித்ததும் அன்றிலிருந்து எனக்குத் தூக்கம் போனது. அதன் பின்பு நிறைய இலக்கியங்களை வாசித்து நானும் இலக்கியம் படைக்கத் தொடங்கினேன்.

Thangar Bachan     Sathyaraj-ThangarBachan--25_31122007

இலக்கியத்தை சரியான சினிமா ஆக்குவது மிகக் குறைந்தவர்கள் தான் இருக்கிறார்கள். நீங்கலள் எப்படி இலக்கியத்தைச் சினிமாக்குத் தயார் செய்தீர்கள்?

இலக்கியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாத இயக்குனர்களும் சினிமாக் காரர்களும்இ ஏன் மக்களும் இருக்கிறார்கள். திரைகளில் இலக்கியத்தைத் தாம் தருகிறோம் என்று சொன்னாலும் அது தவறான கதைகளும் கருக்கணங்களும் தான். பொழுதுபோக்காக படைக்கப்படும் நூல்களை சிறந்த இலக்கியமாக சித்தரிக்கிறது ஊடகங்கள்இ இயக்குனர்கள் சரியான இலகியங்களை படிப்பதுமில்லைஇ அதை சினிமா ஆக்கத் தெரிவதுமில்லை.

என்னைப் பொறுத்தவரை எனக்கு முதலில் இலக்கியம் இரண்டாவது தொழிலுக்காகப் படித்த ஒளிப்பதிவு அதன் பிறகுதான் இயக்குனராக வந்ததுஇ இதனால் தான் என்னை ஆட்கொள்கின்ற இலக்கியத்தை விடாமல் செய்கிறேன். மிகவும் இக்கட்டான நிலையில் தான் நான் இதைச் செய்கிறேன்.

உலக திரைப்படங்கள் குறைந்த பொழுதுபோக்கு கதைகலைத் திரைப்படமாகத் தந்திருக்கிறதுஇ ஆனால் தமிழ் நாட்டில் அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அழகி என்கின்ற திரைப்படம் கல்வெட்டு என்கின்ற சிறுகதை. சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாயகிஇ பள்ளிக் கூடம் ஒன்பது ரூபாய் நோட்டு களவாடிய பொழுதுகள் எல்லாமே எனது நாவல்கள்.

உங்களைப் பாதித்த சிறுகதை அல்லது சிறுகதை எழுத்தாளன் என்றால் யாரைச் சொல்வீர்கள்?

சி. ராமநாராயணன் சிறந்த இலக்கியப் படைப்பாளி. அடுத்தது அவருக்கு இணையாக நாஞ்சில் இருவரும் சிறந்த இலக்கியங்களை ஒரு வருடமாகத் தந்து கொண்டு இருப்பவர்கள். இதை நான் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த அளவுக்கு என்னைப் பாதித்தவர்கள். சிறுகதை என்றால் இராமநாராயணனுடைய சினேகம் என்ற சிறுகதைஇ நாஞ்சில் நாடானுடைய தலை எழுதும் கீதங்கள் மிக முக்கியமான சிறுகதை.

tamil-cinema-ammavin-kaipesi-new-photos-08    thangar-bachan-in-ammavin-kaippesi-movie-stills1      

தமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தையும்இ பண்பாட்டையும் சீரழிக்கிறது என்று எப்படி   சினிமாவில் இருந்து கொண்டே ஒரு சினிமாக்காரரால் சொல்லமுடிகிறது?

சினிமாவில் இருப்பதால் தான்  எது சரியான சினிமா? எது சீரழிக்கிற சினிமா?  என்று தெரிகிறது. அதனால் தான் நான் இதில் இருந்து கொண்டு போராடுகிறேன். பெரியார் அரசியலில் இருந்து கொண்டு அரசியல் வாதிகளை எல்லாம் திட்டித்தீர்த்தார் அதுபோல் தான் நானும் சினிமாவில் இருந்து கொண்டு தமிழரின் வாழ்க்கையைச் சிதைக்காமல் பண்பாட்டை மாற்றாமல் சினிமாப் படங்களை கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறேன். தமிழர் அடையாளங்களைச் சிதையாமல் திரைப் படங்களை மற்றவர்களும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து போராடுவேன்.

முப்பத்தொன்பது வயதுக்குள் தமிழ் மொழிக்கும் தமிழுக்கும் விழிப்புணர்வைத் தந்த பாரதியார் 28 வயதுக்குள் சினிமாப் பாடல் மூலம் பகுத்தறிவைத் தந்த பட்டுக் கோட்டையார் போல் இனி எப்படி இப்படி ஒருவர் ?

நெடு நாள் வாழ்க்கையை விட மிகக் குறைந்த வயதுக்குள் வாழ்ந்த பாரதிஇ பட்டுக் கோட்டையார் மற்றும் பெரியார் போன்றவர்கள் நெடுநாள் வாழ்ந்து  சிறப்பான வாழ்க்கைப் பாடங்களை தந்து விட்டுப் போய் இருக்கிறார்கள். இப்போது பத்து வருடங்கள் நாம் வாழ்ந்தாலும் பக்கத்து வீட்டுக் காரனின் பெயர் தெரியாமலேயே வாழ்ந்து விட்டுப் போகக் கூடிய சூழ்நிலைதான் எமது வாழ்க்கை முறையில் இருக்கிறது.

 pallikudam_007 (1)     pallik03

அரசியலோஐயோ அது நமக்கு வேண்டாம் என்று சொல்வோரும் இங்கும் பலர் இருக்கிறார்கள். தாங்கள் இலக்கியத்தோடு எப்படி அரசியலைப் பார்க்கிறீர்கள்?.

ஒரு கலைஞ்ஞருடைய படைப்பென்பது மக்களுக்கான வாழ்வையும் அவர்களுக்கான கலையையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்க வேண்டும்.அவர்களுக்கான அரசியலையும் உள்ளடக்காத கலை என்றாலது வெறும் குப்பை என்றுதான் நான் சொல்வேன். எனது இலக்கியப் படைப்பும் எனது கலையும் மக்களுக்கான அரசியலை மட்டும் பேசும்இ எப்போதுமே பேசிக் கொள்ளும்.—-

ஒரு ஒளிப்பதிவாளராக இருக்கும் போது இயக்குனர் எடுக்கும் காட்சி உங்களை வெறுப்பு உண்டாக்குகிறது என்றால் எப்படி இதை சகித்துக் கொள்வீர்கள்?

இது தொடர்ந்து இந்தப் போராட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனது ஒளிப்பதிவுத் துறை என்பது முதலில் தொழிலைத் தேடுவதற்காக ஆரம்பிக்கப் பட்டாலும் ஒளிப்பதிவுத் துறையைப் படித்தபோது நான் பார்த்த படங்களும் படித்த நூல்களும் என்னை முற்றிலுமாக மாற்றி வடிவமைத்தது. நான் கேள்விப் பட்ட சினிமாவுக்கும் நான் படித்த சினிமாவும் என்னை முற்றிலும் மாற்றிப் புரட்டிப் போட்டது. இதனைக் கொண்டு 40 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளனாகப் பணியாற்றிவிட்டு கமராவில் பிடிக்கின்ற போது  நிறையக் கருத்து முரண்பாட்டைச் சந்தித்திருக்கிறேன். திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவாளனாக பணி புரிந்த இயக்குனர்கள் புரிந்து கொண்டார்கள்.

 

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் எமன் என்ற நாவல் எதைப் பின்னணியாகக் கொண்டது என்று சொல்ல முடியுமா?

இது எனது பிறந்த தென்னார்க்காடு மாவட்டம் இப்போது கடலூர் மாவட்டத்தில் இருந்த சிறு கிராமங்கள் அழிந்து போய் விட்டது.  எமது நீர் நிலைகள் அழிந்து போய் விட்டது.  இவை காப்பாற்றப் படவில்லை. காற்றும் சுவாசத்துக்கு உகந்ததாக இல்லை. இதற்குக் காரணம் இந்தியாவுக்கே மின்சாரத்தைத் தந்துகொண்டிருக்கின்ற —நெல்வேலி நிலக்கரி நிறுவனம் செய்து கொண்டிருக்கின்ற ஒரு மோசமான செயல்பாட்டை தான் இந்த நாவல் வெளிக் கொண்டு வரப்போகிறது. இந்த நாவல் ராமாயி அடிகளின் பிறப்பில் இருந்து 2006 வரையும் அந்த நாவல் தொடர்கிறது.

 pallikoodam-320   Ammavin-Kaipesi-Images

உங்களின் படைப்புகளுக்கு நீங்கள் நிறைய விருதுகள் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்ட விருதுகளில் இது சிறந்ததில்லைஇ தரமான விருது தரப்படவில்லை என்று நினைத்ததுண்டா?

விருதை எதிர்பார்க்கின்ற எந்தக் கலைஞனும் உண்மையான கலைஞனாக இருக்கமுடியாது. அந்த வரிசையில் தான் நானும் கொடுக்கப்படும் விருதுகள் தகுதியானவர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை. நான் விருதுகளைச் சென்று வாங்கவில்லை. நான் தலைகுனிந்து தான் அந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டேன் தலை வணங்கவில்லை.

எங்கள் நாட்டில் நடந்த கோர இனச் சிதைவு உங்களுக்கு என்ன பாதிப்பைத் தந்தது? அது ஏன் ஒரு இலக்கியமாகவோ சினிமாவாகவோ வெளிவரவில்லை?

2002 என்று நினைக்கின்றேன் நான் தமிழீழத்திற்கு நேரில் சென்று மக்களின் அவலங்களையும் போரின் பாதிப்பையும் இந்த விடுதலைக்கான தேவையையும் உணர்ந்து இந்த அவலங்கள் எல்லாவற்றையும் இந்த உலகிற்குச் சொல்லும் விதமாக பிரச்சார நெடியில்லாமல் ஒரு படைப்பை தர வேண்டும். திரைக் கதையை எழுதினேனதைப் படமாக்க ஏறக்குறைய பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களைச் சந்தித்தேன் பலவகையான செய்திகளைத் திரட்டி ”தாய் மண்” என்று தலைப்பிட்டு இலக்கியமாகக் கொண்டுவராமல் திரைப்படமாகக் கொண்டுவர பலரையும் அணுகினேன். யாரும் முன்வரவில்லை.”தாய்மண்” இலக்கியமாக இருந்தால் அது வரலாறாக மட்டும் தான் இருக்கும். திரைப்படமாக வந்தால் இது பலரையும் பலவிதமாக மனம் திறக்க வைக்கும் என்று எண்ணினேன். அதில் தோற்றும் போனேன்.

 

தமிழர் வாழும் நாடுகளில்சித்திரையா” ”தைப்பிறப்பாதமிழரின் முதல் வருடப் பிறப்பு என்ற குழப்பம் இருக்கிறது. இந்தக் குழப்பம் தீர்க்க?   

என் வீட்டிலும் இருப்பதும் சித்திரைதான்

தமிழரின் புது வருடப் பிறப்பு. நான் சங்க இலக்கியங்களையும் தமிழ் அறிஞர்களையும் அணுகி அவர்களின் கூற்றின்படி அவர்கள் தந்த ஆதாரத்தின்படி எமக்கு தை ஒன்றுதான் அதாவது தைப் பிறப்பு ஒன்றுதான் தமிழர்களின் புதுவருடப் பிறப்புஇ சூரியப்பொங்கல் தான் தமிழர்களின் ஆண்டின் முதல் நாள். இது தான் உண்மை. இது பிறரால் மாற்றப்பட்ட வரலாறு. இதை இப்போதும் செய்து வருகிறார்கள்.இதை நாம் நிறுத்த வேண்டும். தைப்பொங்கல் திருநாளை வருடப் பிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

 

புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் வளரும் என்ற நம்பிக்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? எமது கலை கலாச்சாரம் பண்பாடு பாதுகாக்கப்படுமா? என்ற கவலை எல்லோர் மனதிலும் இருக்கிறது. இது எமது தலைமுறையோடு முடிந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

முதலில் தமிழ் பற்றிய உணர்வை அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர்கள் புலம் பெயர்ந்த நம்முடைய சொந்தங்கள். ஈழவிடுதலைப் போரட்டம் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியே இருக்கின்ற தமிழர்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்காது. ஈழத்தமிழர்கள் தங்களின் அடையாளத்தை பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கின்ற போக்கைப் பார்த்து நான் பிரமிக்கின்றேன். இதனைப் பார்த்து இந்தியத் தமிழர்களும் இதனோடு சேர்ந்திருக்கிறார்கள். ஒரு இனம் தனது மொழியைப் பாதுகாக்க வேண்டும் அதை அவுஸ்ரேலியாவிலும்இ கனடாவிலும் பிரித்தானியாவிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் பள்ளிகளை நிறுவி செயல்ப்படுவது மிகவும் சந்தோசத்தை தருகிறது.

stuffed pics 006

அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவருகின்ற தமிழ் அவுஸ்ரேலியா நாளிதழ் இணைய சஞ்சிகைக்கு நீங்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்.?

தமிழர்களை இணைக்கக் கூடிய பெரிய ஒரு கயிறு எமது மொழிக்கு சிறந்த ஊடகங்கள் இருந்தால் தான் அந்த மொழி அழிக்கப் படும்போதுஇ விதைக்கப் படும்போது எமது மக்களின் நாக்கில் இருந்து அழிந்து போய்விடும். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே பிறமொழிக் கலப்பு வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள். பிறமொழிக்கான அர்த்தங்களைக் கீழே குறிப்பிடுங்கள். உதாரணமாக சந்தோசம் என்ற சொல் தமிழ்ச்சொல்லில்லை. அது மகிழ்ச்சி என்பதையும் சந்தோசம் என்ற சொல் சமஸ்கிருதம் என்பதையும் குறிப்பிடமறக்க வேண்டாம். நீங்கள் வெளியிட இருக்கும் ”தமிழ் அவுஸ்ரேலியா’ சிறப்பாக வெளிவர எமது வாழ்த்துக்கள்.

 

2009 மே 18 க்கு பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு சிக்கலான காலமாக இருக்கலாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்றுகூடத் தெரியாமல் இருக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர் என்ன செய்யவேண்டும் என்று ஒரு இயக்குனராக நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்

தமிழீழம் என்பது நிச்சாயமாகக் கிடைக்கக் கூடிய ஒன்று அது கிடைக்கும் காலம் தான் தெரியாது. அது கிடைக்குமானால் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களும் தாய் மண்ணில் வாழுகின்ற எமது உறவுகளும் நினைத்தால்தான் முடியும். தயவுசெய்து இந்திய அரசாங்கத்தையோஇ தமிழ் நாட்டுத்தலைவர்களையோஇ அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்களையோ நம்பி ஏமாந்து போகவேண்டாம். இந்திய அரசியல் என்பது அவர்கள் பெரியார் போன்றவர்கள் அரசியல் நடாத்தியது போன்றில்லை. அவர்கள் கொடியும் காரும் கட்சித்தொண்டர்களும் குண்டர்களுமாக தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொண்டு மக்களிடம் வாக்கு வேட்டையாட வழி சமைக்கிறார்கள். இதற்கு ஈழத்தமிழரின் துயரம் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியல் வாதிகளே தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்புவதுமில்லை. பயப்படுவதுமில்லை. இளைய தலைமுறைகள் தான் இவர்களைத் திருத்தவேண்டும்.

2009 மே 18 நடந்த கோரச் சம்பவம் தமிழ்நாட்டுத் தமிழர்களோஇ சினிமாத் துறையினரோ தங்களுக்கு இது பற்றி தெரியாது என்று சொல்கிறார்களே?

அதனை என்னால் ஏற்கமுடியாது அந்த சண்டைக்கு முன்பாகவே  தமிழ் நாட்டில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. இனப் பேரழிவு நடந்தபோதும் ஊடகங்கள் உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொண்டுதான் வந்தன. ஆனால் மக்களிடம் இருந்து எந்த எதிர் விளைவும் வராதது எனக்கெல்லாம் பெரிய ஆச்சரியம் தான். அதிர்ச்சியும் தான். மே 17,18 காலப்பகுதிகளில் தமிழ் நாட்டுத் திரையரங்குகளில்இ வியாபாரநிலையங்களில் மக்கள் நிறைந்து தான் இருந்தனர். இப்படிப் பட்ட மக்களோ திரைத்துறையினரோ எந்தக் காலத்திலும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்தில் நம்பமுடியாது. இந்த சினிமாக்காரரை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வுக்கே தான் எனது பிறவியே இருக்கிறது என்று சொல்லும் அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். திரைத்துறையினர் தங்களின் திரைப்படங்கள் புலம் பெயர்ந்த தேசங்களில் திரைக் காட்சிகள் நிறைய வேண்டும் என்றே மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசுகிறார்கள். வேறு ஒன்றும் இல்லை.

arooraan ஆவூரான் | ஆஸ்திரேலியாவிலிருந்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்