மெல்பேர்ணில் வாழ ஆசைப்
பட்டு வந்து குதிச்சிட்டேன்
வீடு வாங்க சீட்டுக் கட்டி
காசத் தொலைச்சிட்டேன்
கடவுள் பேரச் சொல்லித் தான்
என்னக் கவுத்திடான்
காசத் சேர்த்து எடுத்திட்டு
கையை விரிச்சுக் காட்டி ட்டான்
நா காடா வேலை செஞ்சு
காச கட்டினே –எந்த
காட்டி லையும் உருவிக் கட்டல்ல
அகதி லேபிள் காசில்லடா
அடி மாடா உழைச்ச காசடா
அவன் பொண்ணு ஒடுறா
Bmw காறில என் பிள்ளை
நடக்கிறான் வெறும் காலில
இதை எங்க எழுதுவேன்
என் சோகப் பாடல
நா மட்டும் முட்டாளில்லடா
நா நூற்று முட்டாள் பார்த்தண்டா
சூரியனே வெளிய வாடா-நீ
சுருட்டிய ஒளியில கொஞ்சம் தாடா
கடவுளாக் கேட்கிறேன்
கருண தான் கெஞ்சுறேன்
உதவி செய்ய உருகிறதால
நா தாழ்ந்து போகல்ல
எனை ஏமாத்தி கொண்டு போனவன்
யாரும் ஏற்றம் காணல்ல
மெல்பேர்ணில் வாழ ஆசைப்
பட்டு வந்து குதிச்சிட்டேன்
– ஆவூரான் –