April 1, 2023 5:33 pm

கவிதை | அக்கா | வந்தியத்தேவன் கவிதை | அக்கா | வந்தியத்தேவன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிறந்தது ஒரு மடி – நான்

வளர்ந்தது உன் மடி

கிடைக்குமா இந்த மடி – மீண்டும்

திரும்புமா அந்த நொடி…

 

அழகிய ஓவியம்போல

விரிந்தது என் வாழ்வு – அதில்

மெல்லிய தூரிகை போல

வரைந்ததோ உன் கைகள்…..

 

சின்னச் சின்ன ஆசைகளும் – என்

சிறுவயது விருப்புகளும்

சிதையாமல் பார்த்தவளே – என்

சிந்தையில் நிறைந்ததை அறிந்தாயோ அன்று

mother_son

என் தேவை என்னவென்று – என்றும்

எனக்குத் தெரிந்ததில்லை

எல்லாமே உன்னிடம் கேட்டே,

வாழ்ந்ததால் நிறைவு கண்டேன்

 

என் தமிழின் அழகியலுக்கு

தண்ணீர் ஊற்றி வளர்த்தவளே – நான்

ரசிக்கும் இலக்கியத்துக்கு

முகவரி தந்து உயர்த்தியவளே

 

தாயாகி திசைகள் காட்டியவளே

சேயாகி வாழ்கின்றேன் நான் !

காலங்கள் கடந்தும் – வாடாத

தாமரை மலரல்லவா நீ…

 

– வந்தியத்தேவன் – 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்