8
சிதறிவிடா உணர்வுகள்
சிகரம் ஏறியதோ ?
சிதையிலே வைத்து
சிதைத்தும் பார்த்தனரோ
பொங்கும் இவர் மனம்
புரிய மறுப்பதோ
புற நானூறு படித்தே
வளர்ந்தவர் இனமல்லோ
விடுதலை நோக்கியொரு
தீப்பொறி எழுந்ததோ
சுருண்டவர் மனமிங்கே
சுடரென பற்றியதோ
அழித்தவர் முகமதில்
அறைந்தே சொன்னீரோ
ஆறியது மனமென்று
அடுத்தது தொடங்கியதோ
விட்டதில் தொடரும்
விடுதலை வேட்கையென்று
இறைமையைத் தேடி
இவர் நடை தொடரட்டும்…
– வந்தியத்தேவன் –