.
என் உயிர்த் தோழி – நீ
என் விழியாய் இருந்தாய் அன்று..
பாசத்தைக் காட்டி என் மீது
நேசமாய் பழகினாய் என்றும்..
உன் அன்பில் உதிர்த்த வார்த்தையில்
மிக உச்சி குளிர்ந்தேன் நானும்..
கால ஓட்டம் வேகமாய் நகர – என்
வாழ்க்கை ஓடம் தள்ளாடி தளர்ந்தது
ஆசை கனவுகள் கலைந்து போக – என்
மனசு கனத்து கருமையாய் தெரிந்தது
என் உயிர்த் தோழி – நீ
என் விழியாய் இருந்தாய் அன்று..
இருட்டை பார்க்கும் என் விழியில் – இன்று
ஒளியை தர ஏன் மறந்தாய்…
உன் மனசை மதித்தேன் என்றும்
என் மனசை நீயேன் மிதித்தாய் இன்று..
பணம் இருந்த போது நட்பு
வறுமை வந்த போது வெறுப்பா…
சொல்….. என்னுயிர் தோழி..
எதனால் விலகினாய் எனை விட்டு…
நம் ஆழமான அன்பு போதாதா..
நம் நட்பு தொடர்ந்து செல்ல…
எதுவாயினும் சொல் என் தோழி..
புரிந்து கொள்வேன் எதனால் என்று……
கயல்விழி | கனடாவிலிருந்து
கயல்விழி | கனடாவிலிருந்து