கவிதை | கதிரைகள் | முல்லை அமுதன்கவிதை | கதிரைகள் | முல்லை அமுதன்

 

போகும் இடமெல்லாம்

கதிரைகள்

பயமுறுத்துகின்றன.

இன்றும்

கதிரை

சொல்லி அனுப்பியது.

எனி

வேலை காலி இல்லை.

 

மீண்டும்

ஒருதடவை

முழங்காலிட்டு

அழுவதைத் தவிர

பிதாவே

எதைச்

சொல்லித தந்தாய்.

சில வருடங்களுக்கு

முன்பும்

இப்படி

அழுத

நாட்கள்

நாட்டைவிட்டுப் பெயரவைத்தது.

 

இங்கும்

கதிரைகளாலேயே

வாழ்வு

நகர்த்தப்படுகிறது.

முன்னர்

அம்மா தன்

மடி தந்து

ஆறுதல் சொன்னாள்.

உலகம் பற்ரிக் கதைகள்

பல சொன்னாள்.

இப்போது

காட்சிதான் மாறிற்றே..

இவள்

ஆறுதல் சொல்கிறாள்

முலை தந்தும்…

 

மீண்டும்

அழவைத்த தேவனே…சொல்

கள்வர்களை

கதைகளில்

உட்காரவைத்த உன்னால்

எப்படி

உண்மையாக வாழ்

என்று எனக்கு மட்டும்

போதித்திருக்க முடியும்?

 

ஒன்றில்

கதிரைக்களை

ஆள்பவனாக வேண்டும்..

அல்லது

எனியாவது கதிரைகள்

உன்னால்

அசுத்தம்

செய்யப்படாமல் வேண்டும்..

 

– முல்லைஅமுதன் – 

 

ஆசிரியர்