April 2, 2023 3:38 am

கவிதை | மொட்டு விரியும் நேரம் | கயல்விழி கவிதை | மொட்டு விரியும் நேரம் | கயல்விழி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

மனமெல்லாம் பரவசம்

கண்ணெல்லாம் ஆனந்தம்

கனவுகள் தோன்றுது

தாலாட்டு பாடுது

காரணம் தான் என்னவோ

சின்ன கண்ணன் வருகையோ!

 

வயிற்றினில் உன் உதைப்பு

கதைகள் பல சொல்லுது

நெஞ்சினில் உன் நினைப்பு

கற்பனையாய் மிதக்குது

இனம் புரியா மகிழ்வொன்று

நெஞ்சுக்குள் அடைக்குது

எம் வாழ்வின் அர்த்தத்தை

வானளவு உயர்த்துது

CheckBlood

தாயெனும் ஓர் பதவி

உன் வரவால் கிடைக்குது

இத் தாயின் நெஞ்சுக்குள்

உன் வரவு இனிக்குது

நன்றி சொல்லி பாடவா

உனை தாலாட்டி பாடவா……

 

 

கயல்விழி | கனடா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்