அண்மையில் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து வெளிவந்த “அப்பா” என்னும் குறும்படம் இளம்வயது மாணவர்களின் தவறான போக்குக்கும் தந்தையின் நம்பிக்கைக்கும் இடையிலான காட்சிப் பதிவுகளாக அமைகின்றது.
இயக்குனர் விதுசன் தனது முதலாவது குறும்படம் என எமக்கு அறிமுகம் செய்துவைக்கின்றார். முதலாவது முயற்சியில் தனது ஆர்வத்தினால் திறமையுடன் குறும்படம் ஒன்றினை உருவாகியுள்ளார். அந்த வகையில் அவரை பாராட்ட வேண்டும். மேலும் தன்னை வளர்த்துக்கொண்டு சிறப்பான படைப்புக்களை தரவேண்டும்.