கவிதை | நிகழ்காலம் ஒரு பொற்காலம் | மகாலிங்கம் பத்மநாபன்கவிதை | நிகழ்காலம் ஒரு பொற்காலம் | மகாலிங்கம் பத்மநாபன்

 

இறந்த காலம்

மீண்டும் வராது.

இனிமையையும்

தந்து விடாது

எதிர்காலத்தில்

எதுவும் நடக்கலாம்

நிகழ்காலம்

அது பொற்காலம்

நிச்சயமான

ஒரு காலம்

மகிழ்ச்சியாய்

நீயும் வாழ்ந்து விடு

மற்றவரையும்

வாழ விடு

 

asaநடந்ததை எண்ணி

வருந்தாதே

நடக்க இருப்பதை

நினைக்காதே

நடப்பதை எல்லாம்

ஏற்றுவிடு

நல்லவை என்றே

போற்றி விடு

நல்லவனாக நீ

வாழ்ந்தால்

நானிலம் உன்னை

வாழ்த்தி விடும்

இந்த நிமிடம்

உனக்கே உரியது

உணர்ந்து நீயும்

வாழ்ந்து விடு

 

நீ செய்வது யாவும்

சரி என்றால்…

கோபம் உனக்குத்

தேவையில்லை

பிழையை விட்டவன்

நீ என்றால்

கோபிக்க உனக்கு

உரிமை இல்லை

சினம்  கொள்ளுதல்

கூடாது

சேர்ந்தாரை அது

கொன்று விடும்

இந்தக் கணத்தை

ரசித்து விடு

அனுபவித்து நீயும்

வாழ்ந்து விடு

 

இனிமையாகப்

பேசிப்பார்

இதமாய் நீயும்

பழகிப்பார்

இன்பம் உன்னைத்

தேடிவரும்

புகைத்தலை நீயும்

நிறுத்தி விடு

மதுவையும் நீ

மறந்து விடு

தேகநலம் உன்னை

நாடிவரும்

முகம் மலர்ந்து

புன்னகை செய்

நண்பர்கள் உன்னைச்

சூழ்ந்திடுவார்.

 

பிறர்க்கு நீயும்

உதவிகள் செய்

துன்பத்தின் போது

துணையாய் இரு

கல்வியை நாடும்

ஏழைக்கு

கனிவாய் நீயும்

உதவிகள் செய்

துன்பத்தில் நீ

துவளும் போது

துணைகள் ஆயிரம்

தேடிவரும்.

 

 

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வு நிலை அதிபர்

 

ஆசிரியர்