March 24, 2023 3:22 am

எனது பார்வையில் கோன் திரைப்படம் | ஜெகன் வி சிவாஎனது பார்வையில் கோன் திரைப்படம் | ஜெகன் வி சிவா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனடாவில் இரண்டு தசாப்தங்களாக எம் கலைஞர்கள், கலைதுறையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த இரண்டு தசப்ப்தங்களிலும் 1992(அன்பூற்று) முதல் கோன்(2014) வரை 44 முழுநீள திரை படங்கள் வந்துள்ளன. இதில் கடைசியாக வந்த திரைப்படம் “கோன்”. அகிலம் மூவீஸ் கே .ராஜ்குமார் தயாரித்து வழங்கியுள்ளார். இவ்வாறு ஒரு நிறுவனமோ, தனி நபரோ இலாப நட்டங்களையும் தாண்டி எமது கலைஞர்களை ஊக்குவிப்பது பாராட்டதக்கது.

கோன் முற்று முழுதாக எம்மவர் கைவண்ணத்தில் வெளியாகிய கனேடிய திரைப்படம். இதில் பங்கு பற்றிய எமது கலைஞர்களும் மற்றும் கனேடிய mainstream கலைஞர்களும் மிக அருமையாக தமது ஆற்றல்களை வெளிகாட்டியது பாரட்டகூடியது. இத்திரைப்படம் எமது சமூகத்தில் இளைஞர்கள் தமது பருவ வயதில் பாதைமாறி செல்கிறார்கள் தம் பெற்றோரிடம் இருந்து தமக்குவேண்டியது கிடைக்க பெறாத பட்சத்தில் அந்த தேடல்களையும், தேவைகளையும் தாமே தேடிக்கொள்ளும் போது அது நல்ல பாதையாகவும் இருக்கும் தவறான பாதையாகவும் இருக்கும். அப்படி தவறான பாதையில் செல்லும் நான்கு இளைஞர்களை மையமாக வைத்து சுவார்ஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கட்சிபடுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

இந்த காலத்துக்கமைய யதாத்ததை யதாத்தமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் ஜெனா கே சிவா. கோன் இவரது இரண்டாவது முழுநீள திரைப்படம். இவரது முதலாவது படைப்பு சஹாரா பூக்கள்.அத்திரைப்படம் சமுக பார்வையை ஒட்டி குடும்ப சூழலை மையமாக வைத்து எடுத்து இருந்தார். சஹாரா பூக்களில் கிடைக்க பெற்ற நிறை குறை போன்ற அனுபவங்களை வைத்து அவரது இரண்டாவது படைப்பு கோன் இல் மிக பாராட்ட கூடிய கதை ,திரைக்கதை, வசனம் ,காட்சிஅமைப்பு ,விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களின் நடிப்புதெரியாமல் பாத்திரத்துக்கு ஏற்றபடி இயல்பாகவே மாற்றி இருந்தது அவதானிக்க கூடியதாக இருந்த்தது. இளைஞர்களையும் பல்லினமக்களையும் ஈர்க்கும் வண்ணம் வசன அமைப்பு, “பொண்ணோ கன்னோ கண்டுள் பண்ண தெரிஞ்சவன் தான் வச்சு இருக்கணும்”,

கனேடிய crime உலகில் காவல்துறை பாவிக்கும்” operating mind technique ” முதல் கொண்டு காட்சி அமைப்பு வரை எமது ஈழ தமிழ் சினிமாவுக்கு புதிதாகவே இருந்தது. இயக்குனரின் எண்ணத்தில் உதித்ததை மிக அழகாக காட்சி படுத்தியுள்ளார் ஒளிபதிவாளர் Jey M. இவரின் camera பார்வையில் ஒவ்வெரு locations மிளிருகிறது. இத்திரைப்படத்துக்கு மேலும் பக்க பலமாக இருப்பது ஜெகன் TJPயின் பின்னணி இசை. ஒரு ஆங்கில படம் பார்ப்பது போல் ஒளிபதிவு மற்றும் பின்னணி இசை அமைந்துள்ளது. Mixing,Mastering and Color Correction ஆகியவற்றை மிக துல்லியமாக Ramesh Selvarajah செய்து இருக்கிறார். மூவரது கடின உழைப்பும் காணகூடியதாக இருக்கிறது.

எனது பர்வைஜில் இத்திரைப்படத்தில் பிளஸ் கதை, திரைக்கதை, வசனம் இசை ஒளிபதிவு Luxsan , Wayne கதா பத்திரங்களின் நடிப்பு locations பல்லின கலஞகர்கள் மைனஸ், சில இடங்களில் காட்சி நீளம் சில இடங்களில் காட்சி குவியம் இன்மை இளைஞர்களை மட்டும் கவரும் வண்ணம் இருப்பது இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் எமது திரையுலகம் தவழும் குழந்தைகளாக இருக்கும் பட்சத்திலும் எமக்கோர்திரையுலகம் வளர்கிறது என்பதை இத்திரைப்படத்தில் காணக்கூடியதகவும் எம்மவரின் படைப்புகளை அடுத்த தளத்துக்குகொண்டுபோய் உள்ளது என்பது குறிப்பிட தக்கது. திரையரங்குசென்று எம்மவிரின் மற்றும் ஒர் நல்ல படைப்பு என்னும் மனதிருபத்தியோடு பார்க்கக்கூடிய திரைப்படம் கோன். எம்கலைஞர்களை ஊக்குவிக்க மக்களாகிய ரசிகர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும், பல தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும் அப்போதுதான் இன்னும் எமது ரசிகர்களின் தேவைக்கேற்ப முழுமையான படைப்புகள் வெளிவரும்.

ஜெகன் வி சிவா.

10504896_10152630605470350_7124454761221569023_o

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்