புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அவள் என் எழில் அழகி | கவிதை | கவிப்புயல் இனியவன்

அவள் என் எழில் அழகி | கவிதை | கவிப்புயல் இனியவன்

1 minutes read

அ வளிடம் இதயத்தை கொடு ….
அ வளையே இதயமாக்கு …..
அ வளிடம் நீ சரணடை ….
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ….!!!

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் …
ஆ ராதனைக்குரிய அழகியவள் ….
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ….
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே….
ஆ ருயிர் காதலியவள் ……!!!

இ தயமாய் அவளை வைத்திரு ….
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ….
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே …….
இ ன்னுயிராய் அவளை பார் …..
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ……!!!

ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ……
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் …..
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ……
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ……
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ……!!!

உ யிரே என்று அழைத்துப்பார் ……
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ……..
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ….
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் …..
உ ண்மை காதல் அடையாளம் அவை …..!!!

ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது …..
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ……
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு …..
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ……
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி …..!!!

எ கினன் படைத்த அற்புதம் அவள் …….
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் …….
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ….
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ……
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ……!!!

 

நன்றி: கவிப்புயல் இனியவன் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More