17
மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் அவர்கள் எழுதிய ”காட்டுநிலா” வானொலி நாடகம், 2021 ஆம் ஆண்டின் சிறந்த சுய நாடக இலக்கியத்திற்கான சாகித்திய மண்டல விருதை (அரச இலக்கிய விருது 2022) வென்றுள்ளது.
போர்க்காலத்தில் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய நா. யோகேந்திரநாதன், புலிகளின் குரல் நாடகங்கள் வழியாகவும் பிரபலமாக அறியப்பட்டார். இவர் இறுதி யுத்த அனுபவத்தை நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலாக எழுதியமை குறிப்பிடத்தக்கது.