திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.
இவ்வரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பன் சுரேன்குமார் மற்றும் நூலக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
இந்த ஓலைச்சுவடிச் சேகரிப்பில் இருந்த திருக்கோண நாதர் மும்மணிமாலையினை தற்போது நூலக நிறுவனத்தினர் PDF வடிவில் பதிவேற்றி உலகிலுள்ள அனைவரதும் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
திருக்கோணேச்சரம் தொடர்பான வரலாற்று பதிவுகளின் தேவை அதிகமாக உணரப்படும் இக்காலத்தில் திருக்கோண நாதர் மும்மணிமாலை ஓலைச்சுவடிகள் கிடைக்கப்பெற்று இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருந்த போதும் ஓலைச்சுவடிகள் உரிய காலங்களில் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
240 ஓலைச்சுவடிகள் அடங்கிய திருக்கோண நாதர் மும்மணிமாலை தற்பொழுது யாவரும் வாசிக்கும் வண்ணம் PDF வடிவில் நூலகத் திட்டத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள படத்தின் மேல் சுட்டுவதன் மூலம் திருக்கோண நாதர் மும்மணிமாலையினை வாசிக்கலாம்.
-டாக்டர் ஜீவராஜ்