47
தீண்டி செல்லும் காற்றின் முகவரியை தேடி
பயணம் இல்லாத பாதையில் சென்று
மனதோடு மனம் பேசும்
இரவில் வரும் நிலவை பார்த்து
அவளின் முகமோ என்று எண்ணி
தூங்காமல் விழித்திருக்கும்
விழி மூடும் நேரமும்
அவளின் நினைவுகள் தூங்காமல்
என்னுள்ளே இம்சைகள் செய்யும்
காதலின் நினைவுகள்
ஆயிரம் ஆயிரம் இருந்தாலும்
காதலியின் நினைவுகள்
என்றுமே ஒன்றுதான்..
நன்றி : சு. சங்கத்தமிழன் | எழுத்து.காம்