செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அசத்தும் சுவையுள்ள இறால் சாப்பிடுவோம்!!

அசத்தும் சுவையுள்ள இறால் சாப்பிடுவோம்!!

3 minutes read

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக மக்கள் அதை அதிகம் விரும்பிகின்றனர். இறாலின் சுவையை தாண்டி பல உடல்நலத்திற்கு நன்மை கொடுக்க கூடிய ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.

நம் விரல் அளவில் இருக்கும் இறாலை ஒரு பிடி பிடித்தால் அது இதய நோயை விரட்டியடிக்கும். மேலும், உடல் எடை குறைப்பதிலும், இளமை தோற்றத்தையும் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண் பார்வை சிதைவு

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும்.

தலை முடி உதிர்தல்

இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடும்

இறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது.

மாதவிடாய் பிரச்சனை

இறாலில் உபயோகமுள்ள கொழுப்பான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் உள்ளது. இது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் குறைக்க உதவும்.

ஆகவே இதனை சாப்பிட்டால், இந்நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இதர கொலஸ்ட்ரால் எதுவும் இல்லாமல் அவர்களின் பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கும்.

எலும்பு ஆரோக்கியம்

உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும்.

ஆனால் இறாலில் உள்ள புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.

மூளை ஆரோக்கியம்

இறாலில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவையும் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி, புரிதல் மற்றும் கவனம் போன்றவற்றில் முன்னேற்றம் தென்படும்.

இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்

இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

எடை குறைப்பு

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

வயதான தோற்றத்தை நீக்கும்

இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது.

இது சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.

எனவே இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More