உடலின் சூடு அதிகரிப்பதால், நமது உடம்பின் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியமும் பாதிப்படுகிறது.
எனவே எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதோடு, எதை உட்கொண்டால் உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இஞ்சி
இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.
மிளகாய்
மிளகாய் என்றாலே படிக்கும்போதே காரம் கண்ணை கட்டும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
கேரட்
உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் கேரட் தான் உடல் சூட்டிற்கும் காரணமாக விளங்குகிறது.
வெங்காயம்
இயல்பாகவே வெங்காயம் நமது கண்களில் எப்படி நீரை வரவழைக்கிறதோ அதே போல் உடலின் நீர் அளவையும் குறைத்து உடல் வெப்பத்தை அதிகரித்து உடல் நல குறைவை ஏற்படுத்தும்.
பச்சை நிற காய்கறிகள்
கீரைகள், பசலைக்கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் அளவிற்கு மீறி அதனை சாப்பிடால் உடலில் அதிகபடியான சூட்டை உண்டாக்கும்