நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயேதிர்ப்பு மண்டலம். இதுதான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலை தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி உடலை காக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்து போராடும். இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10 முதல் 15 நிமிடம் வரை நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.
முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை, அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும். பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறிவிடும்.
நன்றி-மாலை மலர்