நினைவுத்திறன் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கு சில உணவுப்பொருட்களை பற்றி பார்க்கலாம். இந்த உணவுகளை தினமும் உங்கள் உணவுடன் சேர்த்துக்கொண்டால், கவனத்திறன் அதிகரிக்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டார்க் சாக்லேட் கவனத்திறனை அதிகரிக்கும் செரோடோனின் மற்றும் எண்டோரிபின் அளவை அதிகரிக்க இது உதவுகிறது.
முட்டையில் மூளை செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவும் கோலின் உள்ளது. இதனால் கவனத்திறன் அதிகரிக்கும்.
தண்ணீர்தாகம், உடல் வறட்சி அதிகமான சோர்வை ஏற்படுத்துகிறது. தண்ணீர் அதிகளவில் குடிப்பதால் சக்தியோடு கவனத்திறனின் அளவும் அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தில் மூளை, இதயம், நரம்புகளை சிறப்பாக வைக்க உதவும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது.
சால்மன் இதில் மூளை செல்களை புதுப்பிக்க உதவும் ஒமேகா -3, பேட்டி அமிலங்கள் அதிகளவில் உள்ளது.
பீட் ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆக்ஸிசன் அளவை அதிகரிப்பதால், மூளைக்கு நல்லது.
ஆரோக்கியமான வாழ்வு