செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பாதம் காக்கும் பத்து சிறந்த வழி முறைகள்

பாதம் காக்கும் பத்து சிறந்த வழி முறைகள்

2 minutes read
  1. எங்கு சென்றாலும் செருப்பு அணிவதை கடமையாக கொள்ளலாமே. செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள். அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும்.
  2. வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது உங்களின் ஒரு முக்கியக் கடமையாக கொள்ளுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் புண்ணை உருவாகத் துணை செய்கிறீர்கள் எனலாம்.
  3. மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்.
  4. உங்கள் பாதங்களின் பின் பகுதி உங்களால் எளிதாகப் பார்க்க முடியாததால் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு புண்கள், கொப்புளங்கள், தோலின் சிவந்த நிறம் ஏதும் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதியுங்கள். இது ஒரு வருமுன் காக்கும் முறையாகும்.
  5. படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
  6. நீங்கள் நடக்கும் போது பாதம் உங்கள் உடல் எடையின் பெரும் பகுதியை தாங்கிக் கொள்கிறது. அதனால் உங்கள் கால்களுக்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை உங்கள் பாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க MCR (MICRO CELLULAR RUBBER) என்ற ஒரு வகை ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை வாங்கி அணிவது ஒரு நல்ல வழியாகும். இது அனைத்து செருப்புக் கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  7. நீங்கள் காலணி (SHOE) அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை (COTTON SHOCKS) உபயோகியுங்கள். காலனிகளை அணியும் முன் உள்ளே ஏதும் கூரான குப்பைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பின் அணியுங்கள்.
  8. நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும்.
  9. அப்படி புண்கள் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.
  10. உங்களின் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக முக்கியம்.

நன்றி விகாஷ்பீடியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More