0
- முதலில் கணினியின் அமைப்புகளை சரிபார்த்து முறையான அளவுகளை வைக்க வேண்டும். எ.கா : திரையின் வெளிச்ச அளவு , எழுத்துரு அளவு மற்றும் பல.
- நீண்ட நேரம் திரையை கூர்ந்து கவனிக்காமல் சரியான கால அளவுகளுக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
- கண்களுக்கு தேவையான விட்டமின்கள் நிறைந்த கீரைகள், கேரட் , சர்க்கரைவள்ளி கிழங்கு, குடைமிளகாய், ப்ரோக்கோலி, வால்நெட் பருப்பு மற்றும் அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உட்கொள்வது நல்லது.
- தினமும் 3 அல்லது 4 முறையேனும் கண்களை தூய குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கழுவிய பின் அழுத்தி துடைக்காமல் துணியை கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும்.
- இரவில் படுக்கும் போது, இரண்டு பஞ்சு உருண்டைகளை எடுத்து நீரில் நனைத்து பிழிந்து விட்டு பின் கண்களின் மேல் வைத்துக்கொண்டு தூங்கலாம். அதில் உள்ள ஈரப்பதம் கண்களில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவும். காலையில் கண்விழிக்கும் போது வித்தியாசத்தை உணர்வீர்கள். பஞ்சுகளுக்கு பதிலாக வட்டமாக வெட்டிய வெள்ளரி துண்டுகளை உபயோகிக்கலாம்.
- வருடத்திற்க்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று முறையாக பரிசோதித்து கொள்வது நல்லது.
- தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
- அக்குபிரஷர் முறையிலான சில பயிற்சிகள் கண்களில் உள்ள அழுத்தத்தை குறைப்பதோடு இல்லாமல் பார்வை திறனையும் அதிகரிக்க செய்கின்றன. கீழ்கண்ட இணைப்பில் சில பயிற்சிகள் உள்ளன. அதை உபயோகித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.