ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைக்க உள்ள புதிய பாக்டீரியா கொரோனாவை தொடர்ந்து சர்வதேச அளவில் இன்னும் நீங்கவில்லை. ஒட்பல கோடி பேருக்கு அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
பாக்டீரியா நம்மை தாக்க வருகிறது என்று சொன்னால் எப்படியிருக்கும்? இப்படி ஒரு செய்தி தான் அமெரிக்க மக்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அந்நாட்டின் வளைகுடா கடற்கரை பகுதியில் வசித்து வந்த மூன்று பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் புர்கோல்டெரியா சூடோமல்லெய் (Burkholderia Pseudomallei) என்ற பாக்டீரியா பாதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிக மிக ஆபத்தான ஒன்று என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளானவர்கள், அதிகப்படியாக மது அருந்துவோர் ஆகியோருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.
அதாவது, உயிரிழப்பிற்கு 50 சதவீதம் அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். இந்த பாக்டீரியா இயற்கையாகவே மண் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள புதிய நீர் ஆகியவற்றில் காணப்படக் கூடியது. குறிப்பாக வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் என்கின்றனர்.
பல ஆண்டுகளுடன் இயற்கையின் அங்கமாக இணைந்து காணப்படுகிறது. மனிதர்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் வரை பிரச்சினை கிடையாது. இதனால் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.
தற்போது மனிதர்களை தாக்கி பாதிக்க தொடங்கியுள்ளது. நல்ல வேளையாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் 50 சதவீத உயிரிழப்புகளுக்கு வாய்ப்பிருக்கிறது என்ற செய்தி எச்சரிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. புர்கோல்டெரியா சூடோமல்லெய் பாக்டீரியா ஆனது கிட்டதட்ட பச்சோந்தி என்று சொல்லலாம். பச்சோந்தி நிறத்தை இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்.
ஆனால் மேற்குறிப்பிட்ட பாக்டீரியா தனது வடிவத்தை வெவ்வேறு விதமாக மாற்றிக் கொள்ளும். கடந்த 2020ஆம் ஆண்டு மே – ஜூலை காலகட்டத்தில் அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் இரண்டு பேருக்கு இந்த பாக்டீரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய நிகழ்வு என்று பார்த்தால் ஜனவரி 2023ல் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான பாக்டீரியா எப்படி அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை பகுதிக்குள் எப்படி நுழைந்தது என்று தெரியவில்லை. இதுதொடர்பான அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.