மகாராணி இல்லாத மாநாடு | அரைமனதுடன் தலைவர்கள் மகாராணி இல்லாத மாநாடு | அரைமனதுடன் தலைவர்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகள் மாநாடு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்காத முதலாவது அமர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற  கொமன்வெல்த் நாடுகள் தலைவர்கள் மாநாடுகளில் பிரித்தானிய மகாராணி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தடவையாக மகாராணி இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டு அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என பக்கிங்ஹாம் மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்க உள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இந்த மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்