பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி!பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யதற்காக அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு இன்று மாலை 5.30 மணிக்கு நடந்தது. சுமார் 6.30 மணிக்கு இந்த கூட்டம் முடிந்தது.

 

ஆட்சி மன்றக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்இ ”பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படுவார்” என்றார்.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட மோடிக்குஇ அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்இ சுஷ்மா சுவராஜ்இ நிதி கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் பாரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் வள முன்னேற்றம் என்பவற்றால் மோடிக்கு ஏற்பட்ட அதிக ஆதரவு இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளதால் இம் முடிவு நிச்சயம் காங்கிரசுக்கு தலையிடியை கொடுக்கப்போகின்ற

ஆசிரியர்