கத்தரிக்காயில் தோன்றிய பிள்ளையார் உருவம் : படையெடுக்கும் பக்தர்கள்.!கத்தரிக்காயில் தோன்றிய பிள்ளையார் உருவம் : படையெடுக்கும் பக்தர்கள்.!

கத்தரிக்காயில் பிள்ளையார் பிரிட்டனில் பிள்ளையார் உருவில் கிடைத்த கத்தரிக்காயை பக்தர்கள் தினம் பூஜை செய்து வணங்கி வருகின்றனர். பிரிட்டனின் லீசெஸ்டர் பகுதியை சேர்ந்த பிரபுல் விஸ்ராம்(61) என்பவர் அப்பகுதியில் உணவு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

கடந்த வாரம் இவர், பெட்டியில் அடைக்கப்பட்ட கத்தரிக்காய்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு கத்தரிக்காய் பிள்ளையார் வடிவில் இருந்தது கண்டு விஸ்ராம் ஆச்சரியப்பட்டுள்ளார். அதனால் அந்த கத்தரிக்காயை சமைக்காமல் அவர் குடும்பத்தினர் சாமி அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர்.

இதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் உள்ள இந்துக்கள் சுமார் 80க்கும் அதிகமானவர்கள் இவர் வீட்டு சாமி அறையில் வைக்கப்பட்டுள்ள கத்தரிக்காய் பிள்ளையாரை வழிபட்டு செல்கின்றனர்.

ஆசிரியர்