இஸ்ரேலியர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளில் பூந்தோட்டம் வளர்க்கும் பலஸ்தீனியர்!இஸ்ரேலியர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளில் பூந்தோட்டம் வளர்க்கும் பலஸ்தீனியர்!

இஸ்ரேல் பொலிஸார் வீசிய கண்ணீர் புகை குண்டுகளின் கொள்கலன்களை பூச்சாடிகளாக பயன்படுத்தி பாலைவனப் பகுதியில் பலஸ்தீனியர்கள் பூந்தோட்டமொன்றினை அமைத்துள்ளனர்.

 

பலஸ்தீனத்தின் தலைநகர் ரமல்லாவிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் வெஸ்ட் பேங்க் நகரிலுள்ள பிலின் எனும் கிரமத்திலேயே

இப்பூந்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இப்பகுதியிலுள்ள மக்களின் விவசாய நிலங்களின் 60 சதவீதமானவற்றை 2004ஆம் ஆண்டு இஸ்ரேலியர்கள் பிரிப்புச் சுவர் மூலம் ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர்.

 

இதனால் 2005ஆம் ஆண்டு முதல் தங்களது நிலங்களை மீளப்பெறுவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரிப்புச் சுவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆர்ப்பாட்டதின்போது இஸ்ரேலின் பொலிஸார் வீசும் கண்ணீர் புகை குண்டுகளின் கொள்கலன்களை சேகரித்தே இந்த பூந்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

2009ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டதில் தலைமை தாங்கினார் பஸ்ஸெம் அபு ரஹ்மா. கண்ணீர் புகை குண்டு மார்பில் சிக்கில் இவர் உயிரிழந்து விட்டார்.

 

இவரது நினைவாகவும் நிலத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் நினைவாகவுமே இந்த பாலைவனச் சோலை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

‘கண்ணீர் புகை குண்டுகள் இன்றி எங்களது வாழ்க்கையை அமைக்க முடியும். கண்ணீர் புகை குண்டுகள் மக்களை கொல்லக்கூடியது.

 

நாங்கள் அதற்குள் பூச்செடிகளை நட்டுள்ளோம்’ என ஊடகவியலாளரும் பூந்தோட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான காதி அபு ரஹ்மா தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை பாதுகாப்பு காரணங்களால் பிரிப்புச் சுவர் தொடர்ந்தும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2408Palestine-5

2408Palestine-1

 

ஆசிரியர்