தமி­ழர்­களின் கனவு நிச்­சயம் நிறை­வேறும்: நரேந்­திர மோடி உறுதிதமி­ழர்­களின் கனவு நிச்­சயம் நிறை­வேறும்: நரேந்­திர மோடி உறுதி

பா.ஜ.க.வின் ஆட்சி அமைந்தால் தமி­ழர்­களின் கனவு நிச்­சயம் நிறை­வேறும் என குஜ ராத் முதல்­வரும், பா.ஜ.க.வின் பிர­தமர் வேட்­பா­ள­ரு­மான நரேந்­திர மோடி உறுதி தெரி­வித்தார்.

சென்னை விமான நிலை­யத்தில் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தமி­ழ­கத்தில் இடம்­பெறும் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ப­தற்­காக நரேந்­திர மோடி, நேற்று மதியம் சென்னை வந்தார்.

ஆம­தா­பாத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்­பகல் 3.12 மணி­ய­ளவில் சென்னை விமான நிலை­யத்தை வந்­த­டைந்த அவ­ருக்கு,தமி­ழக பா.ஜ. நிர்­வா­கிகள் சிறப்பு வர­வேற்­ப­ளித்­தனர்.

அப்­போது, அங்­கி­ருந்த செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அவர் பேட்­டி­ய­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது,

டில்­லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மாற்றம் தமி­ழ­கத்தில் ஏற்­பட்­டுள்­ளது. இது­போன்ற நேரத்தில், மத்­தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் நாங்கள் தமி­ழர்­களின் கன­வு­களை நிறை­வேற்­றுவோம் என உறுதி கூறு­கிறேன் என தெரிவித்தார்.

ஆசிரியர்