உலகம் வெப்பமாதல் பற்றிய இசை ஆல்பம்உலகம் வெப்பமாதல் பற்றிய இசை ஆல்பம்

 

ஹோம் ரெகார்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பாக வயலின் இசைக்கலைஞர்கள் கணேஷ் – குமரேஷ் இருவரும் இணைந்து “சீசன்” என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

பருவ காலங்களை நாம் வசந்தகாலம், மழைகாலம், வெயில்காலம், பனிக்காலம் என ஆறு வகைகளாக பிரித்திருக்கிறோம். ஆனால் உலகம் வெப்பமாகிக் கொண்டிருபதால் அந்தந்த காலங்களில் நிகழ வேண்டியவை தள்ளிப் போய் விடுகிறது. அதனால் உலகத்தை காக்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்கிற உரிய கருத்தை கொண்டு இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கணேஷ் – குமரேஷ் – சின்மயி பாடியுள்ள இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. கணேஷ் – குமரேஷ் இருவரும் கே.பாலசந்தரின் “ஒரு வீடு இரு வாசல்” என்ற படத்தில் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள. மேலும் இவர்கள், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், உட்பட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

இவைதவிர, டான்ஸ் லைக் எ மேன் (Dance Like a Man) என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருதுகளை பெற்றுள்ளனர் கணேஷ் – குமரேஷ் இருவரும்.

 

ஆசிரியர்