Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரி­யாவில் 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை | 55000 க்கும் அதிகமான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது சிரி­யாவில் 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை | 55000 க்கும் அதிகமான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது

சிரி­யாவில் 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை | 55000 க்கும் அதிகமான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது சிரி­யாவில் 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை | 55000 க்கும் அதிகமான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது

3 minutes read

சிரி­யாவில் மக்கள் எழுச்சி ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு தடுத்து வைக்­கப்­பட்ட சுமார் 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­மைக்­கான தெளி­வான சான்று உள்­ள­தாக முன்னாள் போர்க்­ குற்ற விசா­ர­ணை­யா­ளர்கள் மூவர் அறிக்­கை­யிட்­டுள்­ளனர்.

பிரித்­தா­னிய கார்­டியன் பத்­தி­ரி­கையும் அமெ­ரிக்க சி.என்.என். ஊட­கமும் இந்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளன.

சிரிய அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றிய ஒரு­வரால் கடத்தி வரப்­பட்ட இறந்த கைதி­க­ளது ஆயி­ரக்­க­ணக்­கான புகைப்­ப­டங்­களை பரி­சோ­தித்­ததைத் தொடர்ந்தே விசா­ர­ணை­யா­ளர்கள் மேற்­படி அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்தப் படு­கொ­லை­களில் சிரிய அர­சாங்கம் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தற்­கான சான்று உள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­களில் ஒருவர் தெரி­வித்தார்.

சிரியா தொடர்­பான சமா­தானப் பேச்­சு­வார்த்தை இன்று புதன்­கி­ழமை சுவிட்ஸர்­லாந்தில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில், அதற்கு ஒருநாள் முன்­பாக மேற்­படி அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சிரி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றிய சீஸர் என அழைக்­கப்­படும் இராணுவப் புகைப்­படக் கலை­ஞரால் சிரி­யாவில் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்ட சுமார் 11,000 கைதிகள் தொடர்­பான 55,000க்கும் அதிகமான இலத்­தி­ர­னியல் புகைப்­ப­டங்கள் கடத்தி வரப்­பட்­டுள்­ளன.

தடுப்­புக்­கா­வலில் வைத்து சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் மர­ணத்தை உறு­திப்­ப­டுத்தி மரணச் சான்­றி­தழ்­களை வழங்கும் முக­மாக புகைப்­ப­ட­மெ­டுக்கும் பணியில் சீஸர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­வேளை எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளையே அவர் கடத்தி வந்­துள்ளார்.

ஆனால், அந்தக் கைதிகள் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தையோ, படு­கொலை செய்­யப்­பட்­ட­தையோ தான் பார்க்­க­வில்லை என அவர் தெரி­வித்தார்.

ஒரு நாளுக்கு 50 வரை­யான பெரு­ம­ளவு சட­லங்­களை புகைப்­படம் எடுக்க வேண்­டி­யி­ருந்­தது எனவும் ஒவ்­வொரு சட­லத்­துக்கும் 15 நிமி­டங்கள் முதல் 30 நிமி­டங்­களை செல­விட நேர்ந்­தது எனவும் அவர் கூறினார்.

a2

a3

a4

a5

a1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More