இளம் மனைவி கணவரால் எரித்துக் கொலை! | ராகுல் காந்தி காரணம் ?இளம் மனைவி கணவரால் எரித்துக் கொலை! | ராகுல் காந்தி காரணம் ?

a1

அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தம் கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கடைசி நாள் கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார். இதன்போது, கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார். “நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவிகளை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் எப்போதும் பாடுபட்டு வருகிறது,” என்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியிடம் கை குலுக்க பலர் முண்டியடித்தனர். அவர்களில் ஒரு பெண் திடீரென ராகுலை நெருங்கி உச்சந்தலையில் முத்தமிட்டார். புன்னகையுடன் ராகுல் அமைதியாக இருந்தார். திடீரென இன்னொரு இளம்பெண் வந்து, ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ராகுலுக்கு தகது மனைவி முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, கணவன் மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டி தீவைத்து எரிக்கப்பட்டாரா என்பது குறித்து குழப்பம் நிலவுவதாகவும், இது குறித்து விசாரித்து வருவதாகவும் முதலில் தெரிவித்த பொலிஸார், தற்போது எரித்துக்கொல்லப்பட்ட பெண் ராகுல்காந்தி கூட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை என்று கூறியுள்ளனர் ஆனால் பொதுமக்கள் பொலிஸாரின் கருத்தை மறுத்துள்ளனர்!

ஆசிரியர்