காணாமல் போன மலேசிய விமானத்தை இலங்கையிலும் தரையிறக்கலாம்காணாமல் போன மலேசிய விமானத்தை இலங்கையிலும் தரையிறக்கலாம்

கடத்தப்பட்ட விமான ஓட்டியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட மென்பொருளில் இலங்கையிலும் இவ்விமானம் இறக்கப்படலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விபரங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

காணாமல் போனதாக அறிவிக்கப்படும் மலேசிய விமானத்தை செலுத்திய விமான ஓட்டியின் வீட்டில் இருந்து விமானம் ஓட்டுவதற்கான வழிகாட்டும் சாதனத்தை உள்ளடக்கும் மென்பொருள் (software) ஒன்றில் விமானத்தை இறக்குவதற்கான பயிற்சி பெறும் 5 இறங்கு தரைகளின் குறிப்புகள் இருந்ததாகவும் அதில் ஒன்று இலங்கை சம்பந்தப்பட்டதானது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய மென்பொருளில் மாலைத்தீவு குடியரசின் மாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று விமான நிலையங்களும் டியாகோ காஸியாவில் அமெரிக்காவின் இராணுவத் தளத்தைக் கொண்ட விமான நிலையமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விமான நிலையங்கள் அனைத்தினதும் விமான ஓடுதரையின் நீளம் ஆயிரம் மீற்றர்கள் என்றும் அறிவிக்கப்படுகிறது. விமானத்தின் பிரதம விமான ஓட்டியான ஷஹ்ரி அஹமட் ஷாவின் இல்லத்தை கடந்த வியாழக்கிழமை சோதனையிட்ட போது இந்த மென்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக காணாமல் போன மலேசிய விமானம் தேடப்பட்டு வரு கிறது. அவ்விமானத்தில் விமான ஓட்டிகள், விமான சிப்பந்திகள், பயணிகள் உட்பட எல்லாமாக 239 பேர் இருந்தார்கள்.

பிரிட்டிஷ், இந்து சமுத்திர கடல் பிரதேசத்தில் உள்ள மத்திய இந்து சமுத்திரத்தில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளத்தில் இந்த விமானம் இறக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இப்போது இந்த விசாரணைகளை பொலிஸாரும் மலேசிய தகவல் தொடர்பு பல் ஊடக ஆணைக்குழுவும் மேற்கொண்டு வருகின்றது. இந்த விமானம் ஏதோ ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த 8ம் திகதி முதல் பொலிஸார் இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

மலேசிய பிரதமர் டாட்டு ஷெரி நஜீப் ரஸாக் இந்த விமானம் பலவந்தமாக திசை திருப்பப்பட்டுள்ளது என்ற தகவலை அடுத்து பொலிஸார் இவ்விரு விமானிகளின் வீடுகளை சோதனையிட்டு வருகிறார்கள்.

18371613
இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அது திசை திருப்பப்பட்டு மேற்கு பகுதியை நோக்கி சென்றிருப்பதாக பிரதம மந்திரி சந்தேகம் தெரிவிக்கிறார். இப்போது இந்த விமானத்தை தேடும் பணிகள் கசகஸ்தான் மற்றும் டக்மி னிஸ்டான், வட அயர்லாந்து மற்றும் இந்தோனேசியா உடனான இந்து சமுத்திரத்தின் மீது மேற்கொள்ளப்படுகிறது.

ஆசிரியர்