குடும்ப வறுமைக்காக கன்னித்தன்மையை ஏலம் விடும் லண்டன் மாணவி.குடும்ப வறுமைக்காக கன்னித்தன்மையை ஏலம் விடும் லண்டன் மாணவி.

லண்டனில் வாழும் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனது செலவுகளுக்கும், குடும்ப செலவுகளுக்கும் பணமில்லாத காரணத்தால் தன்னுடைய கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனின் 27 வயது மருத்துவக்கல்லூரி மாணவி Elizabeth Raine என்பவர் பிறப்பால் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் தனது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக தனது பிளாக்கில் விளம்பரம் கொடுத்துள்ளார். இவரது கன்னித்தன்மைக்கு இவர் நிர்ணயித்துள்ள விலை $400,000 ஆகும்.

தான் இதுவரை யாருடனும் டேட்டிங் சென்றது இல்லை என்றும், செக்ஸின் மீது தனக்கு எவ்வித ஈர்ப்பும் இருந்தது இல்லை என்று கூறியுள்ள Elizabeth Raine, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது கன்னித்தன்மையை யாராவது ஒருவரிடம் இழந்துதான் ஆகவேண்டும். நான் என்னுடைய கன்னித்தன்மையை எனது குடும்பத்தினரின் நலனுக்காக இழக்க விரும்புகிறேன். இதில் எவ்வித தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று அவர் தனது பிளாக்கில் கூறியுள்ளார்.

என்னுடைய இந்த முடிவிற்காக எனது நண்பர்களும், சகோதரரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆசிரியர்