தாயின் வாழ்த்துக்கள் 45 வருடங்கள் கழித்துதாயின் வாழ்த்துக்கள் 45 வருடங்கள் கழித்து

நியூயார்க்கில் உள்ள ஒரு பெண்ணுக்கு வந்த கடிதம் 45 வருடங்கள் கழித்து தாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது. 45 வருடங்களுக்கு முன்னர் தனக்கு கிடைக்க வேண்டிய கடிதத்தை பார்த்த அந்த பெண், ஆனந்தக்கண்ணீர் விட்டு அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூயார்க நகரத்தில் Susan Heifetz என்ற பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை மூன்று கடிதங்கள் வந்தன. அந்த கடிதங்கள் அனுப்பப்பட்ட தேதியை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவற்றில் ஒரு கடிதம் ஜூன் 26, 1969ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. அவருடைய தாயார் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அனுப்பிய கடிதம் அது. தற்போது அவருடைய தாயார் உயிரோடு இல்லாததால், இந்த கடிதம் தன்னை நெகிழ வைத்துவிட்டதாக கூறினார்.

அடுத்த கடிதம் அவருடைய முன்னாள் ஆண் நண்பர் ஒருவர் வியட்நாமில் இருந்து அனுப்பிய கடிதம். இந்த கடிதமும் 1969ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. மூன்றாவது கடிதம் அவருடைய சகோதரர் Barry என்பவர் அனுப்பிய பிறந்தநாள் கடிதம். இந்த மூன்று கடிதங்களையும் பார்த்து Susan Heifetz ஆனந்தக்கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.

கடிதங்கள் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டது குறித்து நியூயார்க் தபால்நிலையம் இதுவரை தனக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று Susan Heifetz of Brooklyn அவர்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

mm-45-year-old-mail-2014-04-11-bk01_i

rs_560x415-140409103627-1024.letters.cm.4914

ஆசிரியர்