ஈரானில் தூக்கு மேடையில் ஒரு அதிசயம் ஈரானில் தூக்கு மேடையில் ஒரு அதிசயம்

iranjuh

ஈரானில், கொலைக் குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்ற இளைஞரை, தண்டனை நிறைவேற்றும் தருவாயில், பாதிக்கப்பட்ட தாய் தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன் தெருச் சண்டையில் அப்துல்லா என்ற இளைஞரை பலால் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றார். இதற்கு பலாலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார்.

இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்து அழுதார். இதனால், பலாலை தூக்கிலிடும் பணி நிறுத்தப்பட்டது.

இது குறித்து பேசிய அப்துல்வின் தந்தை,  கடந்த 3 தினங்களுக்கு முன்பு எனது மனைவியின் கனவில் எனது மூத்த மகன் வந்து உள்ளான்.

அவன், தான் நல்ல இடத்தில் இருப்பதாகவும் எனவே, பழிக்கு பழி வாங்க வேண்டாம் என்றும் எனது மனைவியிடம் கூறியுள்ளான். இது எனது மனைவியை அமைதியடைய செய்தது. எனவே, தண்டனை நிறைவேறும் நாள் வரை நாங்கள் அதிகமாக யோசித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

பலாலுக்கு மரண தண்டனையை குறைக்க அந்த பெற்றோர் கூறியுள்ளனர். எனினும், பலால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்