ராகுல் ஒரு கோமாளி | உண்மையை வெளிபடுத்தும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்ராகுல் ஒரு கோமாளி | உண்மையை வெளிபடுத்தும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்

Rahul-Gandhi-PTI-Aug6

பிரதமர் பதவி வகிப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ராகுல் ஒரு கோமாளி. மக்களவைத் தேர்தலில் ராகுலால்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது என்று கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் முஸ்தபா கூறியுள்ளார்.

கேரள காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கருணாகரன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முஸ்தபா சட்டப்பேரவைத் தேர்தலி 5 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர்.

இவர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் ஒரு ஜோக்கர் என்பது பொதுமக்களுக்கு தெரிந்திருப்பதால் தான் காங்கிரஸ் படு தோல்வி அடைந்துள்ளது. உடனடியாக அவர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக வேண்டும். அல்லது கட்சித் தலைமை அவரை விலக்கிவிட்டு பிரியங்காவுக்கு பொறுப்புகளை தர வேண்டும் என்று கூறினார்.

ஆசிரியர்