இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள பதாவு என்ற கிராம பகுதியில் 2 பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
14 மற்றும் 15 வயது பிள்ளைகளின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை இரவிலிருந்து தேடப்பட்டு வந்த இவர்கள் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.