அச்சுறுத்தலுக்கு எதிராக யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம்அச்சுறுத்தலுக்கு எதிராக யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் 12 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் அச்சுறுத்தலும் கொலை மிரட்டலும் பயங்கரவாதம் இல்லையா?,பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்து, பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா? அல்லது கொலைக்களமா?,யாழ்.பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனை இல்லை, நினைத்தவேளை பல்கலைக்கழகத்தை மூடுவதுதான் மாணவர் மையக் கல்வியா?,ஆசியாவின் அதிசயம் பல்கலை ஆசிரியரைக் கொல்வதா? ஆகிய வசனங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

ஆசிரியர்