March 24, 2023 2:19 am

‘ரம்மசன்’ புயல் பிலிப்பின்ஸில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு ‘ரம்மசன்’ புயல் பிலிப்பின்ஸில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

பிலிப்பின்ஸின் கிழக்குப் பகுதியில் ‘ரம்மசன்’ புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியதில் 13 பேர் பலியாயினர். இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கானோர் பாது காப்பான இடங்களில் தஞ்ச மடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்த இந்தப் புயல் காரணமாக மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் 6 மாகாணங்களில் தாழ் வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 3.7 லட்சம் பேர் தங்கள் வீடு களை விட்டு வெளியேறி அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங் களில் தங்கி உள்ளனர். பள்ளிகள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேவையான உதவிகளை மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கியும், மரங்கள் விழுந்தும், சுவர் இடிந்து விழுந்தும் 11 மாத குழந்தை உட்பட 13 பேர் பலியாயினர். மூன்று மீனவர்களைக் காணவில்லை.

அதேநேரம், தலைநகர் மணிலா மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள வடக்கு மாகாணங்களில் அவ்வளவாக பாதிப்பில்லை. எனினும், இப்பகுதிகளிலும் மரங் கள் ஆங்காங்கே விழுந்துள்ளன.

மணிலா நகர மேயர் ஜோசப் எஸ்ட்ரடா கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தவர்களை அப்புறப் படுத்தி விட்டோம். இதனால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட வில்லை” என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்