உலக வெப்பநிலை புள்ளி விவரங்களின் படி ஜூன் மாதத்தில் அதிக வெப்பம் உலக வெப்பநிலை புள்ளி விவரங்களின் படி ஜூன் மாதத்தில் அதிக வெப்பம்

உலக வெப்பநிலை புள்ளி விவரங்களின் படி, 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப அளவை விட, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

இதனை அமெரிக்க அரசின் வானிலை முகமை தெரிவித்துள்ளது. அதாவது 1880ஆம் ஆண்டு வெப்ப அளவு பதிவு செய்யத் தொடங்கிய பிறகு 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து 352வது மாதமாக அதிக வெப்ப அளவைப் பதிவு செய்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப அளவை தொடர்ச்சியான 352வது மாதமாக ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அளவு பதிவாகியுள்ளது. கிரீன்லாந்து, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகள், கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் அதிக வெப்ப அளவு பதிவாகியுள்ளது.

நிலம் மற்றும் கடல் மேற்புற சராசரி வெப்ப அளவு 16.2 டிகிரி செல்சியஸ். இது கடந்த நூற்றாண்டில் இருந்த 15.5 டிகிரி செல்சியஸிலிருந்து அதிகரித்துள்ளது.

கடல் நீர்மட்டம் அதிகரிப்பதற்கும், சில இடங்களில் வறட்சி அதிகமாவதற்கும் சில இடங்களில் அளவுக்கதிகமாக மழை பெய்வதற்கும் வெப்ப அளவு அதிகரிப்பே காரணம் என்று அமெரிக்க வானிலை முகமை எச்சரித்துள்ளது.

ஆசிரியர்