காமன்வெல்த்தில் ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரரின் பதக்கம் பறிக்கப்படுமா ? காமன்வெல்த்தில் ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரரின் பதக்கம் பறிக்கப்படுமா ?

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 29 வயதான பிரான்சிஸ் எடோன்டி, காமன்வெல்த் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வேல்ஸ் அணி பளு தூக்குதல் வீரருடன் தகராறில் ஈடுபட்டதாக ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் காவலில் இருக்கும் பிரான்சிஸ் எடோன்டியின் அடையாள அட்டை அங்கீகாரத்தை ரத்து செய்ய காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷன் உத்தரவிட்டுள்ளது. அவரது பதக்கம் பறிக்கப்படுமா? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

ஆசிரியர்