புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனாவில் இரசாயனத் தொழிற்சாலை அருகில் வெடிப்பு

சீனாவில் இரசாயனத் தொழிற்சாலை அருகில் வெடிப்பு

1 minutes read

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

பெய்ஜிங்கின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜாங்ஜியாகௌவில் உள்ள இராசயன ஆலைக்காக இரசாயங்களை ஏற்றிச்சென்றிருந்த வாகனம், ஆலைக்கு வெளியில் வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆலைக்கு வெளியே எரிந்த கார்களும் டிரக்குகளும் காணப்படுகின்றன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளும், விபத்தின் காரணத்தை அறிவதற்கான புலனாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2022 ஆம் ஆண்ட சீனா நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சில போட்டிகளை ஜாங்ஜியாகௌவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More