ஆஸ்திரேலியாவில் உள்ள தென் ஆசியர்களை குறிவைத்து நடத்தப்படும் திட்டமிட்ட திருமண மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அங்கு நிரந்தரமாக குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கிவந்த இந்த திருமண ஏஜெண்டுகள் அந்நாட்டு எல்லைப்படையினரால் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய நபராக செயல்பட்டு வந்த 32 வயது இந்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவருடன் 4 ஆஸ்திரேலியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய 164 வெளிநாட்டினரின் வாழ்க்கைத்துறை விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய எவருக்கும் நிரந்தரமாக வாசிப்பதற்கான விசா வழங்கப்படவில்லை.
வெளிநாட்டினர் ஒருவர், ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கொண்ட ஒருவரை திருமணம் செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் அவர் அங்கு நிரந்தரமாக குடியேறலாம்.
ஆஸ்திரேலிய அரசின் கருத்துப்படி, மோசமான சமூக நிலையில் உள்ள ஆஸ்திரேலிய இளம் பெண்கள் இதில் குறிவைக்கப்படுகின்றனர். கணிசமான தொகை தருவதில் பெயரில் இப்பெண்களை சம்மதிக்க வைப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நபரிடம் பெரும் தொகையை இத்திருமணத்தை ஏற்பாடு செய்யும் ஏஜெண்ட் பெற்றுக்கொள்கிறார்கள்.
இவ்வாறான திருமணங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய எல்லைப்படையின் விசாரணைத் தளபதி கிளிண்டன் சிம்ஸ் “இப்படியான திருமணங்கள் வழியாக விசா பெற முயற்சி செய்பவர்கள், இதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு பணம் கொடுப்பதாலேயே நிரந்தர விசாவை பெற்று விட முடியாது என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்” எனக்